தமிழ்நாடு – மானுடப் புவியியல்
மானுடப் புவியியல் என்பது மனித சமுதாய வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் மற்றும் இயற்கை சூழலுடனான செயல்பாடுகள் குறித்துக் கற்றல் ஆகும். தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் வேளாண்மையாகும்.
வேளாண்மை
இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து 65%க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் துறையைச் சார்ந்துள்ளனர்.
| பயிர் வகை | முக்கிய பயிர்கள் |
|---|---|
| உணவுப் பயிர்கள் | நெல், திணை வகைகள், பருப்பு வகைகள் |
| பணப் பயிர்கள் | கரும்பு, பருத்தி, சூரியகாந்தி, தென்னை, முந்திரி |
| தோட்டப் பயிர்கள் | தேயிலை, காபி, ஏலக்காய், இரப்பர் |
நீர்ப்பாசன முறைகள்
- கிணறு மற்றும் குழாய் கிணறு நீர்ப்பாசனம் – மாநிலத்தின் 50%க்கும் மேல்
- கால்வாய் நீர்ப்பாசனம் – காவிரி டெல்டா பகுதி
- ஏரி நீர்ப்பாசனம் – தமிழ்நாடு ஏரி நீர்ப்பாசனத்தில் முதலிடம்
கனிம வளங்கள்
| கனிமம் | இடம் |
|---|---|
| லிக்னைட் | நெய்வேலி |
| பாக்சைட் | சேலம், நீலகிரி |
| மைக்கா | திருச்சிராப்பள்ளி, மதுரை |
| கிராபைட் | சிவகங்கை, மதுரை |
| சுண்ணாம்புக்கல் | திருநெல்வேலி, விருதுநகர் |