ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
மூன்று கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுப் படைகளை வென்ற கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் விரிவாக்கத் தொடங்கியது. உள்ளூர் ஆட்சியாளர்களும் நிலக்கிழார்களும் இதனை எதிர்த்தனர்.
பாளையக்காரர் அமைப்பு
பாளையம் என்பது ஒரு சிறிய அரசு அல்லது இராணுவ முகாம். பாளையக்காரர்கள் ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசர்கள். 1529இல் மதுரை நாயக்கர் விஸ்வநாத நாயக்கர் தமிழகத்தில் இம்முறையை அறிமுகப்படுத்தினார். 72 பாளையக்காரர்கள் இருந்தனர்.
பூலித்தேவர் கிளர்ச்சி (1755-1767)
- நெற்கட்டுமரசேவல் பாளையக்காரர்
- ஆங்கிலேயருக்கு எதிராக முதல் எதிர்ப்பை நிகழ்த்தியவர்
- மேற்கு பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்கினார்
- ஹைதர் அலி, பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவை நாடினார்
- கலகாடு போரில் மஃபுஸ்கானின் படையை தோற்கடித்தார்
- 1767இல் கேப்டன் கேம்ப்பெல்லால் தோற்கடிக்கப்பட்டார்
வேலுநாச்சியார் (1730-1796)
- இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்
- சிவகங்கை மன்னர் முத்துவடுகரை மணந்தார்
- 1772இல் ஆங்கிலேயர் சிவகங்கையைத் தாக்கி முத்துவடுகர் கொல்லப்பட்டார்
- கோபால நாயக்கர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்டார்
- ஆங்கிலேய காலனிய ஆட்சியை எதிர்த்த முதல் இந்தியப் பெண் அரசி
- குயிலி - வேலுநாச்சியாரின் விசுவாசமான தோழி; ஆங்கிலேயர் ஆயுதக்கிடங்கை அழித்தார்