உடல் நலம் மற்றும் நோய்கள்
தனிநபர் ஒருவரின் சுகாதாரப் பழக்க வழக்கங்களும், நடத்தை முறைகளும் நாள்பட்ட நோய்களான இரத்த சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்றவை உருவாதலில் முக்கியப் பங்காற்றுகின்றன.
தவறான பயன்பாடு மற்றும் வகைகள்
- மது அருந்துதல்: கல்லீரல் பாதிப்பு (சிரோசிஸ்), மூளை பாதிப்பு, குடும்ப சிக்கல்கள்
- புகையிலை பயன்பாடு: நுரையீரல் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், இதய நோய்கள்
- போதைப் பொருள் பயன்பாடு: மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு
நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
| அம்சம் | வகை 1 நீரிழிவு | வகை 2 நீரிழிவு |
|---|---|---|
| காரணம் | கணையத்தின் பீட்டா செல்கள் அழிக்கப்படுதல் (தன்னுடல் எதிர்ப்பு) | இன்சுலின் எதிர்ப்பு அல்லது போதுமான இன்சுலின் உற்பத்தியின்மை |
| வயது | இளம் வயதினர் (குழந்தைகள்) | வயது வந்தோர் (40 வயதுக்கு மேல்) |
| சிகிச்சை | இன்சுலின் ஊசி | உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் |