கரைசல்கள்
ஒருபடித்தான கலவையை கரைசல் என்கிறோம். கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒருபடித்தான கலவை ஆகும்.
கரைசலின் கூறுகள்
- கரைபொருள்: குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு
- கரைப்பான்: அதிக அளவு (எடை) கொண்ட கூறு
நீர் ஒரு 'உலகளாவிய கரைப்பான்' அல்லது 'சர்வகரைப்பான்' என்று அழைக்கப்படுகிறது.
கரைசல்களின் வகைகள்
| கரைபொருள் | கரைப்பான் | உதாரணம் |
|---|---|---|
| திண்மம் | திண்மம் | உலோகக் கலவைகள் (தாமிரத்தில் கரைக்கப்பட்ட காப்பர்) |
| திரவம் | திண்மம் | பாதரசத்துடன் கலந்த சோடியம் (இரசக்கலவைகள்) |
| திண்மம் | திரவம் | நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு |
| திரவம் | திரவம் | நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் |
| வாயு | திரவம் | நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டைஆக்சைடு (சோடா நீர்) |
| வாயு | வாயு | ஆக்சிஜன் - ஹீலியம் வாயுக்கலவை |