அணுக்கரு இயற்பியல் (Nuclear Physics)
10ஆம் வகுப்பு அறிவியல் - அலகு 6
கதிரியக்கம் என்பது அணுக்கருவின் தன்னிச்சையான சிதைவு நிகழ்வாகும். 1896 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்ரி பெக்கொரல் கதிரியக்கத்தைக் கண்டறிந்தார்.
கதிரியக்கக் கண்டுபிடிப்பு
- ஹென்ரி பெக்கொரல் (1896) - கதிரியக்கத்தைக் கண்டறிந்தார்
- மேரி கியூரி மற்றும் பியரி கியூரி - ரேடியம், பொலோனியம் தனிமங்களைக் கண்டறிந்தனர்
- எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு - அணுக்கரு மாதிரியை முன்மொழிந்தார்
இயற்கை மற்றும் செயற்கைக் கதிரியக்கம்
| பண்பு | இயற்கைக் கதிரியக்கம் | செயற்கைக் கதிரியக்கம் |
|---|---|---|
| வகை | தன்னிச்சையான சிதைவு | தூண்டப்பட்ட சிதைவு |
| உமிழ்வு | ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் | நியூட்ரான், பாசிட்ரான் போன்ற துகள்கள் |
| கட்டுப்பாடு | கட்டுப்படுத்த இயலாது | கட்டுப்படுத்த இயலும் |
| அணு எண் | பொதுவாக 82 ஐ விட அதிகம் | பொதுவாக 82 ஐ விட குறைவு |