மின்னோட்டவியல் (Current Electricity)
10ஆம் வகுப்பு அறிவியல் - அலகு 4
ஒரு கடத்தி வழியாக மினனூட்டங்களின் (எலக்ட்ரான்களின்) இயக்கமே மின்னோட்டம் ஆகும். மின்னோட்டத்தின் திசையானது நேர்மின் மூனையிலிருந்து எதிர்மின் முனையை நோக்கி இருக்கும்.
மின்னோட்டம் (Electric Current)
ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதியை ஓரலகு நேரத்தில் கடந்து செல்லும் மினனூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும்.
I = Q/t. SI அலகு: ஆம்பியர் (A)
மின்னழுத்த வேறுபாடு (Potential Difference)
V = W/Q (செய்யப்பட்ட வேலை / மினனூட்டம்). SI அலகு: வோல்ட் (V)
ஓம் விதி (Ohm's Law)
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் அமையும்.
V = IR
மின்தடை (Resistance)
ஒரு பொருளின் வழியாக மினனூட்டங்கள் பாய்ந்து செல்வதை எதிர்க்கும் பண்பு மின்தடை ஆகும். SI அலகு: ஓம் (Ω)
R = ρL/A (ρ = மின்தடை எண், L = நீளம், A = குறுக்குவெட்டு பரப்பு)
மின்தடையாக்கிகள் இணைப்பு
| பண்பு | தொடர் இணைப்பு | பக்க இணைப்பு |
|---|---|---|
| தொகுபயன் மின்தடை | R_s = R₁ + R₂ + R₃ | 1/R_p = 1/R₁ + 1/R₂ + 1/R₃ |
| மின்னோட்டம் | அனைத்திலும் ஒரே அளவு | பிரிந்து செல்லும் |
| மின்னழுத்தம் | பிரிந்து செல்லும் | அனைத்திலும் ஒரே அளவு |