இயக்க விதிகள் (Laws of Motion)
10ஆம் வகுப்பு அறிவியல் - அலகு 1
விசை என்பது 'தள்ளுதல்' அல்லது 'இழுத்தல்' என்ற புறச்செயல் வடிவம் ஆகும். சர் ஐசக் நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் மூலம் பொருளின் இயக்கத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.
நிலைமம் (Inertia)
- ஓய்வில் நிலைமம்: ஓய்வு நிலையில் உள்ள பொருள் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
- இயக்கத்தில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள் தமது இயக்க நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
- திசையில் நிலைமம்: இயங்கும் திசையிலிருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
நியூட்டனின் முதல் விதி
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
உந்தம் (Momentum)
உந்தம் (p) = நிறை (m) × திசைவேகம் (v). SI அலகு: கிகி மீவி-1
நியூட்டனின் இரண்டாம் விதி
ஒரு பொருளின் உந்த மாற்ற வீதம், அப்பொருளின் மீது செயல்படும் விசைக்கு நேர்விகிதத்தில் அமையும்.
F = m × a (விசை = நிறை × முடுக்கம்)