கணினியில் தகவல்களைச் சேமிக்கவும், படங்கள் வரையவும், காணொளிகளை உருவாக்கவும் பல சக்திவாய்ந்த கருவிகள் உள்ளன. இந்தப் பாடம் கோப்பு, கோப்புத்தொகுப்பு, வரைகலை மற்றும் காட்சித் தொடர்பு சாதனங்கள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குகிறது.
7.1 கோப்பு மற்றும் கோப்புத்தொகுப்பு
கணினியை நாம் நாடுவதற்கான காரணம் அதன் வேகமும் தகவல்களைச் சேமிக்கும் திறனுமாகும். கணினியில் தனிக் கோப்பு அல்லது பல கோப்புகளை உள்ளடங்கிய கோப்புத்தொகுப்பில் நமது செய்திகளைச் சேமித்து வைக்கலாம்.
7.1.1 கோப்பு (File)
கணினியில் இடம் பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் 'கோப்பு' என்று அழைக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் செயலியின் தன்மையைக் கொண்டே கோப்பின் தன்மை அமைகிறது.
| கோப்பு வகை | நீட்சி (Extension) | விளக்கம் |
|---|---|---|
| Word ஆவணம் | .doc / .docx | உரை ஆவணம் |
| Excel தாள் | .xls / .xlsx | கணக்கு அட்டவணை |
| PowerPoint | .ppt / .pptx | விளக்கக்காட்சி |
| படக் கோப்பு | .jpg / .png / .gif | படங்கள் |
| ஒலிக் கோப்பு | .mp3 / .wav | ஒலி |
| காணொளிக் கோப்பு | .avi / .mp4 | காணொளி |
| இணையதள கோப்பு | .htm / .html | இணையதளம் |
| PDF கோப்பு | படிவ ஆவணம் |