இடைச்சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொற்களிலிருந்து வேறுபட்டது; இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது; தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது. பெயர், வினைச் சொற்களை இடமாகக் கொண்டு நடப்பதால் இடைச்சொல் எனப்பட்டது. இது பெயர்வினைச் சொற்களுக்கு உள்ளும், அவற்றின் முன்னும் பின்னும் ஒரு இடைச்சொல்லோ பலவோ பெயர் வினைச் சொற்களின் அக, புற உறுப்பு ஆக இடம்பெறும்.
இடைச்சொற்களின் வகை
வேற்றுமை உருபுகள், வினையுருபுகள், சாரியைகள், ஒப்புருபுகள், தத்தம் பொருளை உணர்த்துவன, இசை நிறைப்பன, அசை நிலைகள், குறிப்புப் பொருளை உணர்த்துவன என்னும் எட்டும் இடைச்சொற்களின் வகைகளாகும்.
| வகை | எடுத்துக்காட்டுகள் |
|---|---|
| வேற்றுமை உருபுகள் | ஐ, ஆல், கு ... முதலியன |
| வினையுருபுகள் | த், ட், ற், இன் — இறந்தகால இடைநிலை முதலியன |
| சாரியைகள் | அன், அத்து, அற்று முதலியன |
| உவமவுருபுகள் | போல, போன்ற, ஒப்ப, உறழ முதலியன |
| தத்தம் பொருளை உணர்த்துவன | அ, இ, உ (சுட்டு) என்பன |
| இசை நிறைப்பன | செய்யுளில் சீர் நிறைபதற்காகப் யன்படுத்தப்படும் 'ஓ', 'ஓ' முதலியன |
| அசை நிலைகள் | அம்ம, மியா, இக முதலியன |
| குறிப்புப் பொருளை உணர்த்துவன | ஐயோ! அடடா! முதலியன — அக, புற உறுப்பாக இடம்பெறல் |