மறுமலர்ச்சிக் கவிஞர்களில் குருதிக் கொடையை வலியுறுத்திப் பாடினவர் வெற்றியழகன். இரத்த தானம் என்னும் மேலான செயலை, பழமொழி வழியாகவும் கவிதை வழியாகவும் சமுதாயத்திற்கு உணர்த்தியவர் இவர்.
கவிஞர் வெற்றியழகன் — அறிமுகம்
| விவரம் | தகவல் |
|---|---|
| பிறந்த நாள் | 12.10.1936 |
| பெற்றோர் | திருமதி முனியம்மாள், திரு. குப்புசாமி |
| விருது | புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வளர்த்தால் ஈர்க்கப்பட்டு கவிதை புனையும் ஆற்றல் பெற்றார் |
| படிப்பு | 1973ஆம் ஆண்டு புலவர் படிப்பில் தேறினார் |
| முழு நேர பணி | கவிதை எழுதுதலை முழுநேர வேலையாகக் கொண்டார் |
| விருதுகள் | நங்கைநல்லூர்த் திருக்குறள் பேரவை முதலிய பல அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன; தமிழக அரசின் பாவேந்தர் விருந்து பெற்றவர் |
| மருத்துவ கருத்து | தம் உடலைப் புதைத்தலும் எரித்தலும் கூடாது என்று கூறி அதனை மருத்துவ ஆய்வுக்கு வழங்கியுள்ளார் |
| தொல்காப்பியம் | தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளார் |