திருக்குறள் உலகம் போற்றும் பெருநூல். எந்நாட்டினரும், எக்கொள்கையினரும் விரும்பும் அறிவுக் களஞ்சியம். தமிழ் மக்களின் பண்பாட்டினையும், வாழ்க்கை நெறியினையும் காட்டும் விளக்கு. திருக்குறளின் அருமை பெருமைகளைப் போற்றுவதாகத் திருவள்ளுவமாலை எனும் செய்யுள் தொகுப்பு உள்ளது.
திருக்குறள் — பொது அறிமுகம்
திருக்குறள் என்னும் ஒப்புயர்வற்ற நூலை யாத்த புலவரின் வரலாறு அறியப்படாமல் இருந்துள்ளது. இவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 எனக்கொண்டு தி.பி. ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவர் 1. நாயனார், 2. தேவர், 3. தெய்வப் புலவர், 4. நான்முகனார், 5. மாதானுபங்கி, 6. செந்நாப்போதார், 7. பெருந்தாவலர், 8. புலவர், 9. பொய்யில் புலவர் முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
நூலின் அமைப்பு
இந்நூல் பால், இயல், அதிகாரம் என்னும் பகுப்பில் அமைகிறது:
| பால் | இயல் | அதிகாரம் |
|---|---|---|
| அறம் | பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் | 38 |
| பொருள் | அரசு, அங்கம், ஒழிபு | 70 |
| காமம் | களவு, கற்பு | 25 |
| மொத்தம் | 133 | |