செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
அறிமுகம்
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றல். அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணைசெய்கிறது. மனித சிந்தனையை இயந்திரங்களில் பொதிந்து வெளிப்படுத்தும் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு ஆகும்.
செயற்கை நுண்ணறிவின் வரையறை
மனிதனின் அறிவாற்றலையும் சிந்தனை ஆற்றலையும் இயந்திரங்களுக்கு அளிக்கும் முயற்சியே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) எனப்படும். இது கணினி அறிவியலின் ஒரு முக்கியமான பிரிவாகும்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள்
- மொழிப்பெயர்ப்பு: ஒரு மொழியில் உள்ள உரையை வேறொரு மொழியில் துல்லியமாக மொழிபெயர்க்கும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு உள்ளது.
- இசையமைப்பு: இசைக் கருவிகளை இசைக்கவும், புதிய இசையை உருவாக்கவும் AI பயன்படுகிறது.
- தானியங்கி மகிழுந்துகள்: மனிதர் இல்லாமலே ஓடும் மகிழுந்துகள் (Autonomous Vehicles) செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.
- கட்டுரை எழுதும் மென்பொருள்கள்: AI கொண்ட மென்பொருள்கள் தானாகவே கட்டுரைகளை எழுதும் திறன் பெற்றுள்ளன.
- கவிதை எழுதும் ரோபோக்கள்: செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆண்ட்ராய்டுகள் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றுள்ளன.
- ஆளில்லா வணிகக் கடைகள்: மனிதர்கள் இல்லாமலேயே நடத்தப்படும் வணிகக் கடைகள் AI மூலம் இயங்குகின்றன.