எழுத்து
(சார்பெழுத்துகள் : ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்கள்)
உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளை முதலெழுத்துகள் எனவும், அவற்றைச் சார்ந்து வரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் எனவும் முன் வகுப்புகளில் கற்றறிந்தோம்.
1. ஐகாரக்குறுக்கம்
'ஐ' என்னும் நெட்டெழுத்தைத் தனியாக ஒலித்துப் பாருங்கள். அது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும். ஆனால், இவ்வெழுத்தைச் (ஐ) சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வருமாறு எழுதி ஒலித்துப் பாருங்கள். அஃது, ஒலி குறைந்து ஒலிப்பதனை உணர்வீர்.
| சொல் | இடம் | விளக்கம் |
|---|---|---|
| ஐம்பது | சொல்லுக்கு முதலில் | ஒன்றரை மாத்திரையாகக் குறைந்தது |
| தலைவன் | சொல்லுக்கு இடையில் | ஒரு மாத்திரையாகக் குறைந்தது |
| கடலை | சொல்லுக்கு ஈற்றில் | ஒரு மாத்திரையாகக் குறைந்தது |