பெண்மை
கவிஞர் அறிமுகம்
கவிஞர் வெ. இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் வெங்கட்ராமன்; தாயார் அம்மாள். இவர் கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் முதல் அரவை கவிஞராக நியமிக்கப்பட்ட பெருமை இவரைச் சாரும். மத்திய அரசின் பத்ம பூஷண் விருது பெற்ற தமிழ்க் கவிஞர் இவர்.
பாடல் – பெண்மை
அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பசொ ரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்;
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்;
உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்;
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்;
மயலார் தமக்கும் அன்பே செய்யும்;
நாணம் கெடாமல் நட்புகொண் டாடும்.
பாடல் பொருள் விளக்கம்
இப்பாடல் பெண்மையின் பல்வேறு பண்புகளையும் பெண்ணின் பல்வேறு கடமைகளையும் போற்றிப் பாடுகிறது.