புறநானூறு
செய்யுள்
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
பொருள்
இவ்வுலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிராகா. முறைசெய்து காத்தலினால் மன்னவனே உயிராவான். வேற்படை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதே ஆகும்.
சொற்பொருள்
- அறிகை – அறிதல் வேண்டும்
- தானை – படை
- கடனே – கடமை
ஆசிரியர் குறிப்பு – மோசிகீரனார்
- இப்பாடலைப் பாடியவர் மோசிகீரனார்.
- தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர்.
- கீரன் என்பது குடிப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது.
- உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
- இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
Key Points (10)
- 1
புறநானூறு என்பது புறம் + நான்கு + நூறு என்ற சொற்களால் ஆனது.
- 2
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- 3
இந்நூல் புறம்பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு ஆகும்.
Practice MCQs (10)
Test your knowledge with these practice questions.
Q1.
A.
B.
C.
D.
Q2.
A.
B.
C.
D.
Q3.
A.
B.
C.
D.
இது ஒரு Preview மட்டுமே
முழு பாடப்பகுதி (10 Key Points, 10 MCQs) ஒரு Exam Pack-உடன் கிடைக்கும். ஏற்கெனவே Pack வைத்திருந்தால் Login செய்யுங்கள்; இல்லையெனில் ஒரு one-time Exam Pack வாங்கித் திறக்கலாம். Daily Micro Test எப்போதும் Free.
Explore more topics in Study Zone
Browse All Subjects