எது பண்பாடு?
இந்தப் பாடம் சமுதாயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பண்புகளையும், தவிர்க்க வேண்டிய பண்புக்கேடுகளையும் நான்கு நிகழ்வுகளின் வழியாக விளக்குகிறது.
நிகழ்வு 1 – எச்சில் துப்புதல்
ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் எங்கும் எச்சிலைத் துப்புவான். யாரேனும் தட்டிக் கேட்டால் சினம் கொள்வான். ஆனால் துப்புவதை நிறுத்த மாட்டான். இவ்வாறு எச்சில் துப்புவதால் காற்றில் நோய் உயிரிகள் பரவி மற்றவர்களுக்கும் நோய்வர வாய்ப்புகள் உண்டு. பொது இடங்களில் எச்சில் துப்புவது தவறான பழக்கம்; இது பண்பாட்டிற்கு மாறானது.
நிகழ்வு 2 – நன்றி சொல்லும் பழக்கம்
சுந்தரத்தின் அப்பா பெயர் பழனி. எல்லாருக்கும் 'நன்றி பழனி' என்றால்தான் உடனே தெரியும். யாரிடம் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் உடனே 'நன்றி' சொல்கிற பழக்கம் உடையவர் பழனி. ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது 'நன்றி' என்னும் சொல்லைப் பயன்படுத்திவிடுவார். பேருந்தில் நடத்துநர் பயணச்சீட்டு கொடுப்பார்; அதற்கும் 'நன்றி' என்பார். அஞ்சல்காரர் கடிதம் கொடுப்பார், அதற்கும் 'நன்றி ஐயா' என்பார். நன்றி உணர்வு ஒரு சிறந்த பண்பாடு.
நிகழ்வு 3 – வரிசை முறை
ஒரு நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் கலந்து நின்றிருந்தார்கள். முத்து என்பவன் வரிசையில் நிற்காமல் திடீரென கதவு திறந்ததும் வேகமாக முன்னால் ஓடினான். கூட்டத்தில் இருந்தவர்கள், "யாரப்பா அது? நாங்கள் வரிசையில் நிற்கிறோமே!" என்றார்கள். முத்துவோ, "உங்க வேலையைப் பாருங்க. எல்லாம் எனக்குத் தெரியும்" என்று முறைத்தான். வரிசை முறையை மீறுவது பண்பாட்டிற்கு மாறானது.