வீரச்சிறுவன்
துணைப்பாடம் | ஆறாம் வகுப்பு தமிழ் – முதல் தவண
கதைச் சுருக்கம்
கொல்கத்தா நகரின் ஒரு பரபரப்பான தெருவில் ஒரு குதிரை வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வண்டியினுள் நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருத்தியின் மடியில் பச்சிளங்குழந்தை இருந்தது. வண்டிக்காரன் கட்டுப்பாட்டில் இருந்த குதிரை திடீரென நாலுகால் பாய்ச்சலில் சிட்டாகப் பறக்கலாயிற்று. குதிரையை அடக்க இயலாத வண்டிக்காரன் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தான்.
வண்டியினுள் உட்கார்ந்திருந்த பெண்மணி பதறினாள். அவள், குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு அழுதாள். வண்டியின் மரச்சட்டம் ஒன்றினைப் பற்றியவாறு மூச்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். "ஐயோ... காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!" என்று அவள் கூக்குரலிட்டாள். அவளின் குரலுக்கு அவ்வழியே சென்ற எவரும் செவி சாய்க்கவில்லை.
அப்போது, ஏறத்தாழப் பதினைந்து வயதுள்ள சிறுவன் ஒருவன் அந்தக் கூக்குரலைக் கேட்டான். அவளையும் அவளின் குழந்தையையும் எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணினான். துடிப்புமிக்க அச்சிறுவன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போலப் பாய்ந்து சாலைக்கு வந்தான். அவன் குதிரைமீது தாவி ஏற முயன்றான். ஆனால், குதிரை துள்ளிக் குதித்து, முதுகை நெளித்து அவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடியது.
Key Points (10)
- 1
கொல்கத்தா நகரில் கட்டுப்பாடு இழந்த குதிரை வண்டியில் பெண்மணியும் பச்சிளங்குழந்தையும் சிக்கிக்கொண்டனர்.
- 2
வண்டிக்காரன் குதிரையை அடக்க முடியாமல் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தான்.
- 3
ஆபத்தில் மாட்டிக்கொண்ட பெண்மணியின் கூக்குரலுக்கு அவ்வழியே சென்ற எவரும் உதவி செய்யவில்லை.
Practice MCQs (10)
Test your knowledge with these practice questions.
Q1.
Q2.
Q3.
இது ஒரு Preview மட்டுமே
முழு பாடப்பகுதி (10 Key Points, 10 MCQs) ஒரு Exam Pack-உடன் கிடைக்கும். ஏற்கெனவே Pack வைத்திருந்தால் Login செய்யுங்கள்; இல்லையெனில் ஒரு one-time Exam Pack வாங்கித் திறக்கலாம். Daily Micro Test எப்போதும் Free.
Explore more topics in Study Zone
Browse All Subjects